cm stalin brought a separate resolution saying that it is not right to deny social justice for conversion

சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தனித் தீர்மானத்தை சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

Advertisment

இதையடுத்து சட்டப் பேரவையில் பேசிய முதல்வர், “இந்தியாவில் இந்து, சீக்கியம், புத்தம் ஆகிய மதங்களைப் பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அவர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் முஸ்லீமாகவும், கிறிஸ்துவர்களாகவும் மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகநீதியை மறுப்பது சரியல்ல. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும்” என்றார்.

Advertisment

பின்னர், ‘இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறுஸ்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களும் அனைத்து வகையில் சமூகநீதியின் பயன்களை பெற அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வருமாறு இந்திய அரசை வலியுறுத்தி’ தீர்மானத்தை முன்மொழிந்தார்.