Advertisment

“2026இல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்” - முதல்வர்!

CM says We are determined to form the DMK government again in 2026  

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.12.2024) தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மீளவிட்டான் என்ற இடத்தில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மினி டைடல் பூங்கா பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் இரு நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் சென்ற போது மக்கள் கூட்டத்தைப் பார்த்து வாகனத்தை விட்டு இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் சென்று பேசினார். சிறிது தூரம் நடந்து சென்று வரவேற்பை பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். குழந்தைகள் தூக்கிக் கொஞ்சினார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். முன்னதாக மினி டைடல் பூங்காவைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் திமுக வீரர்கள் களம் 2026இல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம். தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனத் திமுக நிர்வாகிகள் உறுதியளித்தனர” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாளை (30.12.2024) காலை 10 மணிக்குப் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 75 ஆயிரத்து 28 மாணவியரின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கான விரிவாக்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை கலந்துகொள்ள உள்ளார்.

Tuticorin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe