Advertisment

முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த பத்திரிகையாளர்கள்

dddd

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (27.06.2021) ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பின் தலைவர் என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்ததற்கு தங்களது நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டனர்.ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும், அவர்கள் நலன் பேணப்படும் என்றும் இச்சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உறுதி அளித்தார்.

Advertisment

journalists
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe