Skip to main content

திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Published on 08/09/2024 | Edited on 08/09/2024
CM MK Stalin suggestion along with the DMK coordination committee 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவிலிருந்து காணொலி வாயிலாக திமுகவின் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை இன்று (08.09.2024) இரவு ஆய்வு செய்தார். அப்போது, முப்பெரும் விழா ஏற்பாடுகள், திமுக பவளவிழா ஏற்பாடுகள், மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின் விவரங்களைக் கேட்டறிந்தார்.

அத்துடன், "பவளவிழாவையொட்டி திமுகவினரின் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கொடிகளைப் பறக்கவிட வேண்டும்" என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். அது மட்டுமல்லாமல், அமெரிக்கத் தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு போட்டுக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியும், கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்தும்  ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அளித்த வரவேற்பு பற்றியும் உற்சாகமாகத் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

CM MK Stalin suggestion along with the DMK coordination committee 

சிகாகோவில் நேற்று நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகவும் சந்தோஷமாக  முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். அப்போது காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக் குழு வழங்கும்" என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.