Advertisment

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

CM MK Stalin meeting along with senior DMK officials

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (17.09.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார். இதனையடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி. ராசனுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், மு.க. ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கும் வழங்கினார்.

Advertisment

இதனையடுத்து செம்படம்பர் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டம் தொடர்பாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பவள விழா பொதுக் கூட்டத்திற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பொன்முடி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Meeting kanchipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe