இ.யூ.மு.லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீனுக்கு முதல்வர் வாழ்த்து!

C M congratulates iUM League President KM Khader Moideen

இ.யூ.மு.லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்குத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த கல்விப் புலமையும், நெடிய அனுபவமும் கொண்ட அவரது அரசியல் பணி மேலும் சிறக்கவும், வெற்றிகள் பெறவும் வாழ்த்துகிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

IUML
இதையும் படியுங்கள்
Subscribe