Advertisment

இந்திய ரயில்வே விற்பனைக்கு அல்ல! சென்னையில் அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்!

கரோனா காலத்தைப் பயன்படுத்தி ரயில்வே, ராணுவத் தளவாடம், நிலக்கரி, மின்சாரம், வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு என்று அத்தனை பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு அளிக்கப்படுவதைக் கண்டித்துநாடு முழுவதும்சி.ஐ.டி.யு. சார்பில்இன்று (ஜூலை 16) போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

தமிழகத்திலும் ரயில் நிலையங்கள் முன்புசி.ஐ.டி.யு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

ஆபத்துக் காலத்தில் மக்களைக் காப்பது அரசு தான்; தனியார் கிடையாது. மேலும் தனியார் வருகையால் சமூக நீதி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை கேள்விக்குள்ளாகின்றன. பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டன. அரசு மக்களுக்கானது. மக்களுக்கான சேவைகளைத் தனியார் மயமாக்கக் கூடாது என்றுஅரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து பதாகைகளுடன் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் முன்வைக்கப்பட்ட கண்டன முழக்கங்கள்:

“குறைந்த செலவில் ஏழைகள் பயணிக்கும் 224 ரயில்களைத் தனியாருக்கு வழங்கக் கூடாது.”

“தனியார் ரயில் புறப்படும் ஒரு மணிநேரம் முன்னும் பின்னும் அரசு ரயில் இயங்காது என்று தனியாருக்கு அரசு உறுதியளித்துள்ளது ஏழை மக்களை ரயிலில் பயணிக்கவிடாமல் செய்யும்.”

”முதியோர், மாற்றுத் திறனாளி, மாணவர், சிறுவியாபாரிகள் சலுகைகள் பறிப்பு; சமூகநீதி மற்றும் வேலைவாய்ப்பு பறிப்பு”

“கரோனா காலத்தைப் பயன்படுத்தி ராணுவத் தளவாடம், நிலக்கரி, மின்சாரம், வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு என்று அத்தனை பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு அளிக்கபடுகிறது”

ஆகிய முழக்கங்களை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

privatization CITU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe