Advertisment

முதல்வரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் (படங்கள்)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டதோடு நன்றியும் தெரிவித்தார். அங்கு வந்திருந்த தொண்டர்களுக்கு மஞ்சப் பையில் மரக்கன்றுகள் வைத்து வழங்கப்பட்டது. விவசாய சங்கத்தின் சார்பில் ஆட்டுக்குட்டி ஒன்றும்அதேபோல் திமுக தொண்டர்கள் சார்பில் ஒட்டகம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. வந்திருந்தவர்கள் சால்வை, புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை முதல்வரிடம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Advertisment

மாலை சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe