ADVERTISEMENT

ஜூலை 17இல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெங்களூரு பயணம்

12:49 PM Jul 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ள உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே சமயம் இந்த கூட்டத்திற்குத் தமிழகத்தில் இருந்து திமுக, விசிக, மதிமுக, கொங்கு நாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் முஸ்லீம் லீக், கேரளா காங்கிரஸ், பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பெங்களூரூவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதையொட்டி ஜூலை 17 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார். இதையடுத்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT