Chief Minister M.K.Stalin Congrats jharkhand cm hemant soren for assembly election

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், இன்று (23-11-24) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 51 இடங்களில் மட்டுமே முன்னிலை வருகிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க 78 இடங்களில் வெற்றி பெற்றும் 55 இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகா யுதி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

Advertisment

அதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் 41 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஜெ.எம்.எம். - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 56 இடங்களிலும், பாஜக கூட்டணி 30 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜெ.எம்.எம். கட்சி 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் ஜெ.எம்.எம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள். அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment