Chief Minister M.K. Stalin says The Governor should continue to talk about the Tamil Nadu government

வடசென்னையில் பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்து புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31-01-25) அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், “சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போதும், துணை முதலமைச்சர் ஆக இருந்த போதும் சென்னைக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளோம். சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் 10 மேம்பாலங்கள் எங்கு எல்லாம் தி.மு.க ஆட்சியில் தான் கட்டப்பட்டது அது மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறோம். சென்னைய சிங்கார சென்னையாக மாற வேண்டும் என பல்வேறு பணிகள் செய்தோம். தற்போது தி.மு.க ஆட்சி வந்த பிறகு சட்டமன்றத்தில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக பணிகளை அறிவிப்பு வெளியிட்டோம். தற்போது ரூ.6350 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மொத்த பணிகள் 282. இதில் 30 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, 166 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அந்த பணிகள் முடிவடையுள்ளது. ஓராண்டு காலத்திற்குள் வடசென்னை வளர்ச்சி பணியை முடிக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சராக நானும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பணிகளை வேகப்படுத்தி வருகிறார்கள்.

Advertisment

வடசென்னை பொருத்தவரை வளர்ந்த சென்னையாக நிச்சயமாக ஓராண்டு காலத்திற்குள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநர் ஒன்று இரண்டு இல்லை அனைத்து விஷயத்திலும் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். அது எங்களுக்கு நல்லது தான், தொடர்ந்து அவர் செய்ய வேண்டும். அவர் செய்ய செய்ய தான் எங்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பை தான் சேர்க்கிறது .தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக்கொள்கிறேன். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பிரச்சினை நீதிமன்றத்தில் வருகின்ற 4 தேதி வழக்கு வர உள்ளது. தந்தை பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் தான் எங்களுடைய தலைவர். பெரியாரை பற்றி பேசுபவர்களை பொறுப்படுத்த தயாராக இல்லை.

Advertisment

ஈரோடு கிடைக்கு தேர்தல் 5ம் தேதி, 8 தேதி ரிசல்ட் அன்று தெரியும். மத்திய பட்ஜெட் குறித்து ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது, தீர்மானம் போட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டுடைய கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல உள்ளோம். நிதிநிலை அறிக்கை வந்தால் தான் தெரியும். சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கொன்று இங்கொன்றுமாக சில தவறுகள் நடைபெறுவதை பெரிதாக்கி பூதாகரமாக்கி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். இதைப் பற்றி கவலைப்படவில்லை சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டு தான் இருக்கிறது” என்றார்.