Chief Minister MK Stalin led by Peace rally

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6வது நினைவு நாள் ஆகஸ்ட் 7 அன்று (07.08.2024) அனுசரிக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

Advertisment

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து இந்த அமைதி பேரணி காலை 7 மணிக்குத் தொடங்க உள்ளது. அதன் பின்னர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் பேரணி நிறைவடைய உள்ளது. அங்கு மலர் வளையம் வைத்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Advertisment

இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கலைஞரின் புதிய நினைவிடத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி (26.02.2024) திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.