இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கான மனுக்களை வழங்கினார். இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார்.
இதனிடையே மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வதற்கான அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளதாம். லண்டனில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளதாகவும், இதில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.