தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. பிரதான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைத்து தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில், மாதவரம் தொகுதி வேட்பாளர் திரு.வி மூர்த்தி, பொன்னேரி தொகுதி வேட்பாளர் திரு.சிறுனியம் பலராமன், ஆவடி தொகுதி வேட்பாளர் திரு.மா.பாண்டியராஜன், கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளர் திரு.பிரகாஷ் ஆகிய நான்கு பேரையும் ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதவரம் மண்டல அலுவலகம் அருகில் திறந்த வேனில் நின்றப்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.