Chidambaram constituency AIADMK sitting MLA ... re-elected

Advertisment

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி விஐபி தொகுதியாகும். இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அகியோரின் சொந்த ஊர் உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பியாகவும் உள்ள தொகுதி ஆகும். எனவே அரசியலில் சிதம்பரம் தொகுதி அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கவனிக்கக்கூடிய தொகுதியாக உள்ளது.

இந்த நிலையில், சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த பாண்டியன் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இதில், அவர் 91,961 வாக்கினை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து திமுக தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் 'ஏணி' சின்னத்தில் போட்டியிட்ட அப்துல் ரகுமான் 75,024 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட நடராஜன் கிருஷ்ணமூர்த்தி 9 ஆயிரத்து 71 வாக்குகளைப் பெற்றுள்ளார்.