Advertisment

"பாஜக காங்கிரஸ் கட்சியைக் கண்டு பயப்படுகிறது" - முதல்வர் பூபேஷ் பாகல் 

chhattisgarh cm bhupesh baghel talks about ed searching  

சட்டிஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி ஊழல் மற்றும் பண மோசடி வழக்கு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

பிலாய் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் தேவேந்திர யாதவ், சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராம் கோபால்அகர்வால் உள்ளிட்ட இன்னும் சிலருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை மேற்கொண்டஅதிகாரிகள் இந்த சோதனை குறித்து தெரிவிக்கையில், "வழக்கு தொடர்பாகஊழல் மற்றும் பண மோசடியால்பயனடைந்தவர்கள் என்ற அடிப்படையில்சோதனை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

Advertisment

சட்டிஸ்கர் மாநில முதல்வர்பூபேஷ் பாகல் அமலாக்கத்துறையினர்சோதனை குறித்து தெரிவிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் வீடுகளில்அமலாக்கத்துறையினர்சோதனை மேற்கொள்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் கட்சி ஏதாவதுமுக்கிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது எல்லாம் இது போன்ற சோதனை நடத்தப்படுகிறது. பாஜக தலைமையிலானஒன்றிய அரசு காங்கிரஸ் கட்சியை கண்டு பயப்படுகிறது. ராகுல்கந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டபோது பதற்றமடைந்த பாஜக தற்போது ராய்ப்பூரில் நடைபெறஉள்ள தேசிய மாநாட்டைகண்டு அச்சம் அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகஒன்றிய அரசு பல்வேறு ஒன்றிய அமைப்புகளைதொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது" என்றார். காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின்வீடுகளில்மேற்கொள்ளப்பட்டஇந்த சோதனையானது காங்கிரஸ் கட்சியினர்மற்றும் சட்டீஸ்கர் மாநில அரசியல் வட்டாரத்தில்பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

chattishghar congress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe