சென்னை சைதை தொகுதியில் இன்று (08-04-2020) கரோனா ஆய்வுப் பணியை மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.சைதை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியுடன் இணைந்து ஆய்வுப் பணியை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு ,சுப்ரமணிய கோயில் தெரு , பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் 'கரோனா ஊரடங்கு' குறித்து ஆய்வு நடத்தினார்.

Advertisment

Saidapet

வி.வி.கோயில் தெருவில் உள்ள பால் கடை, வி.எஸ். முதலி தெருவில் உள்ள மளிகைக் கடை ஆகிய இடங்களுக்குச் சென்ற அவர், அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் மளிகைப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா? அரசு குறிப்பிட்டுள்ளநேரத்தில் மட்டுமே கடைகள் செயல்படுகிறதா? என்பது குறித்து விசாரித்தறிந்தார்.

Saidapet

Advertisment

மேலும், அங்கிருந்த பொதுமக்களிடம், பொருட்களை வாங்க , வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் 'தனிமனித இடைவெளியை'ப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். பொருட்களின் விலையேற்றம் குறித்தும் விசாரித்தறிந்தார் ஸ்டாலின்.

இதனையடுத்து, சுப்ரமணிய கோயில் தெரு, பஜார் ரோடு பகுதியில் கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை 'டிசம்பர் 3 இயக்கத்தின்' மூலம் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளில் வழங்கிட, அதன் மாநிலத் தலைவர் பேரா.தீபக்கிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின்.

http://onelink.to/nknapp

Advertisment

ssss

மேலும், சைதை தொகுதி மக்களுக்கு முகக் கவசங்கள்,சானிடைசர்கள்,சோப்பு உள்ளிட்ட மருத்துவப் பொருட்களையும் வழங்கினார்.ஸ்டாலினின் ஆய்வுப் பணிகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார் தொகுதியின் எம்.எல்.ஏ.வான மா.சுப்ரமணியன்.