கடந்த சில தினங்களுக்கு முன்பு அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க.தமிழ்செல்வன் பேசிய ஒரு ஆடியோ வெளியானது.
அதில் அமமுகவின் பொதுச்செயலாளர் தினகரனை அவர் தகாத வார்த்தையில் பேசியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் அவரை அதிமுகவில் இணைக்கக்கூடாது என சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும் அப்படி செய்தால் ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது எனவும் அதில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
நாளை தங்க. தமிழ்செல்வன் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.