A. K. Viswanathan

Advertisment

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 28.02.2020 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகள், சாலை மற்றும் தெருக்களில் கூட்டம், பேரணி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த மார்ச் 14ஆம் தேதி காலை 9 மணி வரை 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இருப்பினும் அனுமதி தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் 5 நாட்களுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.