Advertisment

சென்னை: M.L.A. பாஸ் ஒட்டிய காரில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்! 3 பேர் கைது!

Chennai:

சென்னைக்கு வந்த காரை சோதனைச் சாவடியில் மறித்துச் சோதனையிட்டபோது அந்த காரில் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காரில் இருந்த 3 பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 6ஆவது ஊரடங்கு சில தளர்வுகளுடன் உள்ளது. இப்போது மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லை, மாநில எல்லை, சுங்கச் சாவடி போன்ற இடங்களில் போலீசார் வாகனங்களைச் சோதனை செய்து இ-பாஸ் இருக்கிறதா என ஆய்வு செய்கின்றனர்.

Advertisment

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் தமிழக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த MLA பாஸ் ஒட்டப்பட்டிருந்த காரை நிறுத்தி ஈ பாஸ் இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். அதற்குக் காரில் இருந்த 3 பேரும் இல்லை என்று கூறியுள்ளனர். உடனே போலீசார் காரை சோதனை செய்துள்ளனர்.

தமிழக பதிவு எண் கொண்ட அந்த காரில் உரிய ஆவணமின்றி ஆந்திராவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 3 பேரை பிடித்துத் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான தகவல் வருவாய்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seized cash car Andhra Pradesh Chennai thiruvallur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe