மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகேவழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கலிப் போராட்டத்தை இன்று காலை நடத்தினர். அப்போது அவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் எனவும்,CAA-NRC-NPR-ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒருங்கிணைத்த இந்த மனிதச் சங்கலிப் போராட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.