அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணத்தை அமலாக்கத்துறைக்கு தர மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது மூன்று வழக்குகளைப் பதிவு செய்திருந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்துவந்தது. விசாரணைக்காக ஆவணங்களை வழங்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பானது தற்போது வழங்கப்பட்டுள்ளது.