/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/305_6.jpg)
சென்னை அருகே திமுக கிளை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த மண்ணிவாக்கம் அண்ணா நகர், கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். 36 வயதான இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவர்அண்ணா நகர் தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார்.
ஆதனூர் ரோட்டில் பார்த்திபன் நடந்து வந்துகொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சம்பவம் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீசார், பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தொழில் போட்டி காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா,முன்விரோதம் காரணமாக நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)