/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhayanithi 458966.jpg)
சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவை தொடர்ந்து அந்த பதவி காலியாக இருக்கிறது. உட்கட்சி தேர்தல் மூலமாகத்தான் மாவட்ட செயலாளர் நியமனம் திமுகவில் நடக்கும்.
அது இல்லாதபோது, மாவட்ட பொறுப்பாளர் என்கிற அளவிலேயே நியமிக்கப்படுவார்கள். அதன்படி, தற்போது சென்னை மேற்கு மாவட்டத்துக்கு பொறுப்பாளர் ஒருவரை நியமிக்கலாமா? என ஆலோசித்து வருகிறதாம் சித்தரஞ்சன் சாலை. அன்பழகனுக்கு இணையாக செலவு செய்வதிலும், கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்துவதிலும் திறமை மிக்க ஒருவரைத்தான் பொறுப்பாளராக நியமிக்க நினைக்கிறதாம் திமுக தலைமை.
இதனையறிந்து, மாவட்ட பொறுப்பை கைப்பற்ற திமுகவின் ஜாம்பவான்கள் பலரும் அவரவர்கள் லாபியில்,சித்தரஞ்சன் சாலையின் உதவியை நாடி வரும் நிலையில், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் இருக்கும், மத்திய சென்னை எம்.பி.யான தயாநிதி மாறனுக்காக அவரது குடும்ப உறுப்பினர்களும் காய்களை நகர்த்தி வருகின்றனர்!
Follow Us