சென்னையில் கரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் ஒரே நாளில் 14,000 கரோனா ஆய்வு செய்யும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதை 16,000, 20,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும் அதே அளவுக்கு உயர்த்த வேண்டும்,அதன் மூலம் கரோனாவை விரைந்து ஒழிக்க வேண்டும்!
சென்னையில் இன்று ஏழாவது நாளாக ஊரடங்கு முழுக்கட்டுப்பாட்டுடன் தொடர்வது பாராட்டத்தக்கது,இதே கட்டுப்பாடு நீடிக்க வேண்டும்.மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதுடன், அறிகுறி உள்ளவர்கள் சோதனையும் செய்து கொள்ள வேண்டும். அதுதான் கரோனா இல்லாத சென்னையை உருவாக்கும்”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.