communist party

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடெங்கும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ஒரு வார கால பிரச்சார இயக்கம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் விதத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்றப் பட்டினிப் பேராட்டம் நடத்துகிறது.

Advertisment

தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடத்தாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை ராமன் (எல்டியுசி), ராஜேஷ் (மக்களுக்கான இளைஞர்கள்), புகழ்வேந்தன் மற்றும் ஜேம்ஸ், ஜெயபிரகாஷ்நாராயணன் (கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் காலவரையற்றப் பட்டினிப் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment