Skip to main content

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகையில் மாற்றம்!

 

Change in Union Minister Amit Shah's visit to Tamil Nadu!

 

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். 

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. 9 ஆண்டுக்கால பாஜக அரசின் சாதனைகளை விளக்க மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 11 ஆம் தேதியில் வேலூர் அருகே பள்ளிகொண்டா பகுதியில் உள்ள கந்தநேரியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

 

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 11 ஆம் தேதி தமிழ்நாடு வர இருந்த அமித்ஷா ஒரு நாள் முன்னதாக நாளை இரவே சென்னை வர இருக்கிறார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது மட்டுமின்றி நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் அவர் ஆலோசனை செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கியத் தலைவர்களைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !