ADVERTISEMENT

ஜெகன் போட்ட ப்ளானில் சிக்கிய சந்திரபாபு நாயுடு! ஆந்திர அரசியலில் பரபரப்பு!

01:13 PM Sep 12, 2019 | Anonymous (not verified)

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்ட தினத்தில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார். அதே போல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் திட்டம், மாநில போக்குவரத்து கழகத்தை அரசே நடத்தும் என்ற முடிவு, காவலர்களுக்கு வார விடுமுறை மற்றும் மக்களின் குறைகளை கேட்க தினமும் நேரில் சந்திப்பு என அரசியலில் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் ஜெகன். அரசியலிலும் எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி வருகிறார்.

ADVERTISEMENT



குறிப்பாக ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நரசாபுறம், பல்நாடு, உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் முடிந்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் இடையே மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் மீது அரசியல் வன்முறைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து பேரணியை நடத்த தெலுங்கு தேசம் கட்சி தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். இதனையறிந்த ஜெகன் நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா ஆகிய பகுதிகளுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

ADVERTISEMENT


மேலும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷையும் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரபாபு நாயுடு தனது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் பேரணி நடத்த திட்டம் போட்டுள்ளார்.ஆனால் அவர்களையும் வீட்டுக்காவலில் இருக்க ஜெகன் உத்தரவு போட்டுள்ளார். இதனில் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT