Skip to main content

ஜெகன் போட்ட ப்ளானில் சிக்கிய சந்திரபாபு நாயுடு! ஆந்திர அரசியலில் பரபரப்பு!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்ட தினத்தில் இருந்து  அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார். அதே போல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் திட்டம், மாநில போக்குவரத்து கழகத்தை அரசே நடத்தும் என்ற முடிவு, காவலர்களுக்கு வார விடுமுறை மற்றும் மக்களின் குறைகளை கேட்க தினமும் நேரில் சந்திப்பு என அரசியலில் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் ஜெகன். அரசியலிலும் எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி வருகிறார். 

 

politics



குறிப்பாக ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நரசாபுறம், பல்நாடு, உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் முடிந்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் இடையே மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் மீது அரசியல் வன்முறைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து பேரணியை நடத்த தெலுங்கு தேசம் கட்சி தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். இதனையறிந்த ஜெகன்  நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா ஆகிய பகுதிகளுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தார். 


மேலும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷையும் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரபாபு நாயுடு தனது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் பேரணி நடத்த திட்டம் போட்டுள்ளார்.ஆனால் அவர்களையும் வீட்டுக்காவலில் இருக்க ஜெகன் உத்தரவு போட்டுள்ளார். இதனில் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.     

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.