Advertisment
தமிழகத்தில் தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதேசமயம் நேற்று (02.04.2021) இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துறைமுகம் தொகுதியின் பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்துக்கு ஆதரவு திரட்டினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக திறந்த வாகனத்தில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.