Advertisment

உணர்வை மதித்து இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் - பாமக ராமதாஸ் வலியுறுத்தல்

PMK

கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைப்பது குறித்து புவனகிரி வட்டாட்சியர் தலைமையில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களின் பிரதிநிதிகளும் முழுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ், 'ஜவுளிப் பூங்கா (SIMA #Textile Processing Park) என்ற பெயரில்கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளைக் கொண்டு வந்துதண்ணீரைக் கலந்து கடலில் விடுவதுதான் இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம் ஆகும். ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சிகளின் பிரதிநிதிகள், பசுமைத் தாயகம், மக்கள் வாழ்வாதார அமைப்பு, மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு 100% எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு முழுமையாகக் கைவிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

TNGovernment factory Cuddalore Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe