மக்களவை தேர்தல்: அஜித், விஜய், ரஜினி, சூர்யா வாக்குப்பதிவு...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

celebrities cast their votes

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள சிலுவம்பாளையம் பகுதியில் தனது வாக்கை செலுத்தினார். ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் மத்திய சென்னையில் உள்ள ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியிலும், விஜய் நீலாங்கரையிலும், அஜித் திருவான்மியூரிலும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். ஐஜேகே கட்சியை சேர்ந்த பாரிவேந்தன் வளசரவாக்கத்தில், ஜோதிமணி கரூரிலும், நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவகுமார், மற்றும் கார்த்தி ஆகியோர் சென்னை தி.நகரிலும் வாக்களித்தனர். ஆழ்வார்பேட்டையில் கனிமொழி ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர்.

loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe