தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடித்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் அதிமுக முன்னிலையில் இருப்பதை கொண்டாடி வருகின்றனர்.