ADVERTISEMENT

தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு கா.மே.ஆ. உத்தரவு

04:28 PM Jul 02, 2018 | rajavel


காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று (02.07.2018) நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 4 மணி நேரங்கள் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT