logo1

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில், நாளை (7-4-2018) காலை 7 மணிக்கு திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை 168 கிலோ மீட்டர் தூரம் வரை காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை தொடங்க உள்ள காவிரி உரிமை மீட்பு பயணத்திற்கான லட்சினை(லோகோ) வெளியிடப்பட்டுள்ளது. ‘’நடப்போம் - குரல்கொடுப்போம் - மீட்டெடுப்போம்’’ என்ற வாசகம் லட்சினையில் இடம்பெற்றுள்ளது.