Skip to main content

6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏக்கள் தீர்மானம்

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
admk

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.,எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீர்மானத்தை முன்மொழிந்தனர்.   அதிமுகவினர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தை வழிமொழிந்தனர்.   

 

admk1admk2admk3

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம்!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Against the decision of the central govt, CM MK Stalin resolution

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் இந்த குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

Against the decision of the central govt, CM MK Stalin resolution

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.02.2024) தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி சட்ட்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார். அந்த தீர்மானத்தில், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அதிகார பரவலுக்கு எதிரானது என்பதால் நடைமுறைப்படுத்தக் கூடாது. மக்காளாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, நடைமுறைக்கு சாத்தியமற்ற திட்டம் என்பதை கருத்தில் கொண்டு கைவிட வேண்டும். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகத் தீர்மானம்; காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றம்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Passed in Congress Resolution against Karthi Chidambaram in sivaganga

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், சிவகங்கை சத்தியமூர்த்தி நகரில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று (03-02-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர். ராமசாமி, சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சரின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்துக்கு, சிவகங்கை தொகுதியை தரக்கூடாது. மேலும், ராகுல் காந்திக்கு எதிராகப் பேசிய கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன், தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம், ‘மோடிக்கு நிகரான தலைவர் யாரும் இல்லை. ராகுல் காந்தி கூட மோடிக்கு நிகரான தலைவர் இல்லை என்றும், ஆனாலும் முறையாக வியூகம் அமைத்தால் மோடியை வீழ்த்தலாம்’ என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.