Advertisment

காவிரி வாய்க்கால்களை முறையாக தூர்வாராத தமிழக அரசுக்கு விவசாயிகள் கண்டனம்

Advertisment

தஞ்சையில் திமுக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் தொடங்கி நடந்தது. பல்வேறு விவசாயிகள் மாட்டுவண்டியில் வந்து வரவேற்பு அளித்தனர். நெல் கதிரோடு பெண்களும், ஏர் கலப்பைகளுடன் விவசாயிகளும் வரவேற்றனர்.

கருத்தரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.இந்த கருத்தரங்கில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காவிரி கால்வாய்களை முறையாக தூர்வாராததால் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது. தற்போது கர்நாடகாவில் மழை பெய்து தண்ணீர் வந்தாலும் விவசாயிகளுக்கு சென்றடைவில்லை. காரணம் வாய்க்கால்களை கமிசனுக்காக முறையாக தூர்வாரவில்லை. தஞ்சை, புதுகை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 341 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது. மாநில அரசு ஒத்துழைக்கிறது. இதற்காக விவசாயிகள் சங்கம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறது. மேகதாது அணைகட்டி 67.16 டிஎம்சி தண்ணீரை தேக்க ரூ 9 ஆயிரம் கோடியில் அணைகட்ட கருத்தரங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. கஜா புயல் பாதிப்புகளை சரி செய்து வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.விவசாயிகள், விவசாய தொழிலாளிகளின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். நாட்டின் ஒற்றுமை ஓங்கிட கோதாவரி, காவிரி இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தி வேண்டும்.அணைபாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழக உரிமைகளை பாதுகாத்திட வேண்டும்.ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் சட்டம் தமிழகத்தன் காவிரி நீர் உரிமையை பாதுகாத்திட வேண்டும். விவசாயகளின் வருமானம் மூன்று மடங்காக்கிட சலுகைகளும் ஆக்கப்பூர்வமான திட்டங்களும் அறிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Farmers delta cauvery Thanjavur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe