ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு 

01:45 PM Apr 06, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்து வரி விகிதங்கள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை அதிகரிக்க உள்ளது. சொத்துவரி உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த நிலையில், சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஈ.பி.எஸ். உள்ளிட்ட அதிமுகவினர் 5000 பேர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT