டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெண்டர் முறைகேடு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும், காவல்துறை விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை தனக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிபதிகள், டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க உத்தரவிட்டனர்.