Advertisment

கழிவறையில் ஏசி, பாத்ரூம் ஏசி, கண்ட இடமெல்லாம் ஏசி... சி.எம்.க்கு போன் போடட்டுமா? ஓசி-யில் ஆட்டம் போட்ட அதிமுக பிரமுகர்

ac

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துருவை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சதீஷ்குமார் வயது (36). இவர் அதிமுக வானூர் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு துருவை கிராமத்தில் உள்ளது. இந்நிலையில் இவரது வீட்டில் அனைத்து அறைகளிலும் குளிர்சாதன ஏசி பொறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

ஏசி 24 மணி நேரமும் பயன்படுத்தி வருவதால் மின்கட்டணம் அதிக அளவில் வருகிறது. இதனை குறைப்பதற்காக ஏசியை மின் மீட்டர் இணைப்பில் பொருத்தப்படாமல், அதனை தவிர்த்து சட்டத்திற்கு புறம்பாக நேரடியாக திருட்டுத் தனமாக பல மாதங்களாக தொடர்ந்து திருட்டு மின்சாரத்தை பயண்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனிடையே மின்துறை அதிகாரிகள் கணக்கு எடுத்தனர். அதில் ஏற்கனவே இருந்த மின்கட்டணத்தைவிட குறைவாக மின் மீட்டர் காட்டியதால் சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த திருச்சிற்றம்பலம் துணை மின்நிலைய மின்துறை அதிகாரிகள், விழுப்புரம் மின்துறை தடுப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து துருவை கிராமத்தில் சதீஷ்குமார் வீட்டில் திடீர் என மின்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடி பல மாதங்களாக பயண்படுத்தி வந்தது தெரியவந்தது.

மின்துறை அதிகாரிகள் சதீஷ்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, "நான் ஆளுங்கட்சி அதிமுக ஒன்றிய செயலாளர், வானூர் சட்டமன்றமே என் கட்டுப்பாட்டில் உள்ளது. எனக்கு சி.எம் எடப்பாடியை தெரியும், அமைச்சரை தெரியும், எம்எல்ஏ என் பாக்கெட்டில் இருக்கார். அமைச்சரை விட்டு உங்களுக்கு போன் பேசுனுமா? உங்களை எல்லாரையும் தண்ணில்லா காட்டுக்கு மாத்திடுவேன். இந்த இடத்தை விட்டு ஓடிடுங்க" என்று மின்துறை அதிகாரிகளிடம் மிரட்டும் தோணியில் அதிகாரியை கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை ஒரு பொருட்டாகவே மின்துறை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. உயர்அதிகாரிகள் உத்தரவின் பேரில் அபாரத தொகை விதித்தனர். அபாரததொகை கட்டாயம் கட்ட வேண்டும். கட்ட தவறினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இதே கிராமத்தில் சதீஷ்குமார் உள்ளிட்ட 5 வீடுகளில் மின்துறை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை திருடி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவர்களுக்கும் அபாரதத் தொகை விதித்தனர். மின்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vanur aiadmk villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe