VETRIVEL

Advertisment

சென்னையில் அமமுக தலைமை அலுவலகத்தில் வெற்றிவேல் செய்தியளாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், அதிமுக பெரிய கட்சி என்று காட்டிக்கொள்வதற்காகவே தேர்தல் அறிவிக்கும் முன்னதாகவே விருப்ப மனு பெறுகிறார்கள். இந்த முயற்சி பலமுறை தோல்வி அடைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அவர்கள் உறுதி எடுத்துவிட்டார்கள். அவர்களுடன்தான் செல்வார்கள். இதற்காக கட்சியினரை சரிகட்டும் வேலையில் அதிமுக தலைமை ஈடுபட்டுள்ளது.

அதிமுகவில் உள்ள பொன்னையன், தம்பிதுரை ஆகியோர் பாஜகவை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் அமைதி காப்பது ஏன். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டே டிடிவி தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்றார்.