Advertisment

வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரடியாக சென்ற வேட்பாளர்..!

Candidate who went directly to the counting center

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று (02/05/2021) எண்ணப்பட்டு, இன்றே முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து, காலை 08.30 மணியளவில் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மாநில காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். அதேபோல் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கையானது கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மேலோங்கியே இருந்த கமல்ஹாசன், அவ்வப்போது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவும் சந்தித்து வருகிறார். இறுதியான முடிவு இன்று மாலைக்குப் பின்னர்தான் தெரியும் என்ற நிலையில், எந்தவித மாற்றங்கள் கூட நிகழலாம் என்பதுதான் நிதர்சன உண்மை. இந்நிலையில், கோவை தெற்குதொகுதியின் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள ஜிசிடி கல்லூரிக்கு கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

visit kamalhaasan kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe