/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_787.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரம்6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களது கூட்டணிகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் முடித்துவிட்டது. மேலும், வேட்பாளர்கள் பட்டியலையும் சில பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதலில் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக அறிவித்தது. அதன்பிறகு நேற்று 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. மேலும், நேற்று கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களையும் அதிமுக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அதிமுகவினர் பல இடங்களில் தங்கள் தொகுதிகளில் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளருமான பரஞ்சோதி அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர், நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று காலை திருச்சி வந்தடைந்தார். அவருக்கு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அதிமுகவினரால் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமயபுர மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். முதல்கட்டமாக சமயபுரம் டோல்கேட் மணச்சநல்லூர் திருப்பஞ்சலி உள்ளிட்ட பகுதிகளில் தன்னுடைய முதல் கட்டப் பிரச்சாரத்தை அவர் நடத்திவருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)