விக்கிரவாண்டியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவித்து கொண்டிருக்கிறது.நேற்று திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என்று அறிவித்த நிலையில் இன்று அதிமுக அறிவித்திருக்கிறது.
அக்கட்சியின் சார்பில் முத்தமிழ்செல்வன் வேட்பாளராக போட்டியிடுகிறார். விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் செயலாளராக இருக்கிறார். விவசாயியான இவர் 1997 முதல் 2015 வரை ஒன்றிய பேரவை செயலாளர் ஆக இருந்துள்ளார். 2011 முதல் 2016 வரை காணை ஒன்றிய செயலாளராக இருக்கிறார். இவர் தான் போட்டியிடுவார் என்று கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.