அதிமுகவை திமுக தொட்டு கூட பார்க்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Advertisment

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.

O. Panneerselvam Kanchipuram Election campaign

அப்போது அவர், காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 எம்பிக்கள் மத்திய மந்திரிகளாக இருந்தார்கள்.அவர்கள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தலோடு அதிமுக காணாமல் போய்விடும் என்று சொல்லுகிறார். 1972ம் ஆண்டு எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை பல சோதனைகள், வேதனைகளை தாண்டி மாபெரும் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவை அசைக்கவோ, எதிர்க்கவோ முடியாது. அதிமுகவை திமுக தொட்டு கூட பார்க்க முடியாது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை அதிமுக அரசு செய்திருக்கிறது. தொடர்ந்து செய்து வருகிறோம். இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும். இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி. எதிர்க்கட்சியில் பிரதமராகும் தகுதி யாருக்கும் கிடையாது என்றார்.