ADVERTISEMENT

Exclusive : உதயநிதி என்ட்ரியால் திமுகவில் நடைபெறும் அமைச்சரவை மாற்றம்

04:12 PM Dec 08, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுகவின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 35 பேர் அமைச்சர்கள் ஆகலாம். ஆனால் இதுவரை 34 பேர் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். உதயாநிதிக்காக ஏற்கனவே திட்டமிட்டு 35 வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்கிறார். அவருக்கு தற்போது மெய்யநாதன் வகித்துவரும் இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் ஒதுக்கப்படுகிறது. மெய்யநாதனுக்கும் அவரிடம் மீதம் இருக்கும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்படுகிறது. அத்துடன் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறையும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கப்படுகிறது.

அத்துடன் உணவுத் துறை அமைச்சரான சக்கரபாணி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மூர்த்தி ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளன. இதில் சக்கரபாணியின் உணவுத் துறையை மாற்றவேண்டாம் என முதல்வரே சொல்கிறாராம். மெய்யநாதனிடம் மிஞ்சி இருக்கும் சுற்றுச்சூழல் துறையையும் உதயநிதியிடமே கொடுத்துவிடலாம். அதற்குப் பதில் வணிக வரித்துறை அமைச்சராகவும், புதுக்கோட்டை மாவட்டத்தைப் பிரித்து ஆலங்குடி, புதுக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்கி மெய்யநாதனை திமுக மாவட்டச் செயலாளராக அறிவிக்கலாமா என்கிற ஆலோசனை முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT