கந்தர் சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை தொடங்கும் நிகழ்ச்சியில்அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சி.வி.சண்முகத்திடம், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை அரசு எடுக்கும்,எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஒரு இனத்தையோ, மதத்தையோ குறை சொல்வோர் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் கைக்கூலிகளுக்கு சமமானவர்கள்” என்றார்.