Skip to main content

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சீனிவாசன்...

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

Dindigul Sreenivaasan



திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் சீனிவசன் வழங்கினார்.


கரோனா  எதிரொலி மூலம் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே மாஸ்க், கிருமிநாசினி, சோப்பு போன்ற கரோனா  தடுப்பு உபகரணங்களுடன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை தொகுதி எம்.எல்.ஏ.வும், வனத்துறை அமைச்சருமான சீனிவாசன் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து தொகுதியிலுள்ள மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள கட்சி  பொறுப்பாளர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளையும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். அதைத் தொடர்ந்துதான் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் இருக்கும் 438 தூய்மை பணியாளர்கள் மற்றும் திண்டுக்கல்  ஒன்றியங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் வேட்டி, சேலை, துண்டு உட்பட நலத்திட்ட உதவிகளை அந்தந்த பகுதிகளுக்கு சென்று அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெல்லை முபாரக்கின் பேச்சு - கண் கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Nellie Mubarak's Speech-Dindigul Srinivasan sad

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முகமது முபாரக், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளரான திலகபாமா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக்கின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும்  நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்கள். அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் வீரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என இரண்டு அமைச்சர்களும் கட்சி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் முபாரக் பேசுகையில், 'இரட்டை இலை சின்னம் எனது அருகில் உள்ளது. ஒன்று திண்டுக்கல் சீனிவாசன் மற்றொருவர் நத்தம் விஸ்வநாதன். எனது அப்பா 2015ல் இறந்துவிட்டார். எனது தாய் 2022 இறந்துவிட்டார். இப்படி தந்தை தாய் இல்லாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பதிலாக தந்தையும் தாயுமாக எனக்கு இரண்டு அப்பாக்கள் உள்ளனர். அதில் ஒருவர் சீனிவாசனும் மற்றொருவர் விஸ்வநாதனும் உள்ளனர். அதேபோல் அதிமுகவில் உள்ள தொண்டர்களும் என்னை அரவணைக்க உள்ளனர்' எனப் பேசினார். இவ்வாறு வேட்பாளர் பேசும்போது, தன்னையே அறியாமல் முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

Next Story

'பாஜக - அதிமுக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்' - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
'This is the reason for the breakdown of the BJP-AIADMK alliance' - Dindigul Srinivasan's speech

அதிமுக - பாஜக இடையே கூட்டணி பிளவு ஏற்பட்டு தற்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் அவ்வப்போது விளக்கங்கள் அளித்து வந்தனர். அதில் அண்ணாவை விமர்சித்தது தான் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாஜக தலைவர் விமர்சித்ததுதான் காரணம் எனத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி முடிவுக்கு காரணம் என்ன என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்காததால் நாங்கள் கூட்டணியை முடித்துக் கொண்டோம். பழனிக்கு காவடி தூக்குவோம் ஆனால் பாஜக தமிழக தலைவருக்கு காவடி தூக்க முடியாது.

தமிழக பாஜக தலைவர்தான் வருங்கால முதலமைச்சர் என பாஜகவினர் கூறி வந்தனர். இப்படி கூறுவதை அவர்களுடைய தலைமையிடம் கண்டிக்க சொல்லி முறையிட்டோம். அடுத்த முதல்வர் அவர்தான் என சொன்னால் நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? அமித்ஷா, நட்டாவிடம் முறையிட்ட பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்'' எனப் பேசியுள்ளார்.