சட்டமன்ற தேர்தல் வரும்போது கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்; எனது ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் அதனை பெரிய அளவில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

Advertisment

rajini

அவர்களைப் பொறுத்த வரையில், 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 22 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்க முடியும். இந்த வெற்றி, 2021-ல் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க உதவியிருக்கும். அதனை ரஜினி தவறவிட்டுள்ளார் என்கிற ஆதங்கமே வெளிப்பட்டு வருகிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ரசிகர்களின் எண்ண ஓட்டங்கள் இப்படியிருக்க, ரஜினியோ, எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து வராது ; இன்னும் 2 வருட ஆட்சியை நிறைவு செய்வார். அதனால் இன்னும் ஒரு வருடத்தில் எத்தனை படங்களில் நடிக்க முடியுமோ அத்தனைப் படங்களில் நடித்து விடுவது என்கிற திட்டத்தில் புதுப்படங்களுக்கு கால்சீட் கொடுத்து வருவதாக அவருக்கு நெருக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment