தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிப்பது குறித்து தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

vijayakanth

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதில், ''தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவை அளிக்கிறது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என கூறியுள்ளார்.